Idhayam Matrimony

சிறப்பான பேட்டிங்: ரிக்கொல்டனுக்கு அஸ்வின் பாராட்டு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      விளையாட்டு
Ashwin 1

Source: provided

துபாய் : தென்னாப்பிரிக்க வீரர்  ரயான் ரிக்கெல்டன்  ஷித் கானை எதிர்கொண்ட விதம் மிகவும் மயக்குவதாக இருக்கிறது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை... 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை  நேற்று முன்தினம் வெற்றி கண்டது. முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 43.3 ஓவா்களில் 208 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளும் இழந்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டா்கள், பௌலா்கள் என இரு தரப்புமே அசத்த, ஆல்-ரவுண்ட் ஆட்டத்துடன் வென்றது அந்த அணி.

ஆட்ட நாயகன் ரிக்கெல்டன்... 

தென்னாப்பிரிக்கா சார்பில் சதமடித்த ரயான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது வென்றார். பலரும் இவரது பேட்டிங்கை பாராட்டி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவரை ரிக்கெல்டன் சிறப்பாக எதிர்கொண்டார்.

மயங்கினேன்...

இது குறித்து தமிழக வீரர் ஆர். அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: ரயான் ரிக்கெல்டன் நல்ல வீரர். ஆனால், அவர் ரஷித் கானை எதிர்கொள்ளும் விதம் மிகவும் மயக்குவதாக இருக்கிறது என்றார். 10 டெஸ்ட்டில் 616 ரன்கள், 6 ஒருநாள் போட்டிகளில் 291 ரன்கள் என இரண்டு  பார்மட்டிலும் 41 சராசரியை ரயான் ரிக்கெல்டன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து