எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி...
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது வீரர், குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஒருவேளை உணவு...
இந்நிலையில் தனது உணவு முறை குறித்து ஷமி பேசியதாவது: 2015க்குப் பிறகு நான் ஒருவேளை உணவு மட்டுமே உண்ணுகிறேன். காலை, மதியம் உண்ணாமல் இரவு உணவு மட்டும் உண்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், பழகிவிட்டால் எளிமையாகிவிடும். என்.சி.ஏ. வில் இருக்கும்போது எனது உடல் எடை 90கிலோவை நெருங்கியது. காயத்திலிருந்து மீண்டு வரும்போது 9 கிலோவைக் குறைத்தேன்.
தள்ளியே இருக்கிறேன்...
இந்த நிலைமையில் இருக்கும்போது உங்களுக்கு நீங்களே சவால் அளித்துகொள்ள வேண்டும். சிறந்த விஷயம் என்னவென்றால் நான் சுவையான உணவுகளை உண்ண விரும்புவதில்லை. இனிப்புகளிடம் இருந்து தள்ளியே இருக்கிறேன். எதையெல்லாம் சாப்பிடக்கூடாதோ அதிலிருந்து தள்ளியே இருக்கிறேன். எப்போதாவது சில சமயங்களில் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


