எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இச்சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.inஇணைதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. அதிகாரப்பூர்வ செல்போன் செயலி(ஆப்) மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


