எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கடலூர் : கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. கடலூர் மாவட்டம், திருப்பயரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில், தமிழ்நாட்டின் 132 அரசுப் பள்ளிகளில் 177.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள், உண்டு உறைவிடப்பள்ளி கட்டிடங்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் – ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தையும் திறந்து வைத்தார். மேலும், 234/77 (ஒருமைக்கண்) செயலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் “அப்பா” எனும் செயலி ஆகியவற்றை தொடங்கி வைத்து, தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாட்டுச் சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் - அப்பா” எனும் செயலி இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி சமீபத்திய தளம் மற்றும் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலி பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அன்றாட தகவல் பகிர்வு மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான அரசு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதை எளிதாக்குகிறது. அத்துடன் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அனைத்து உத்தரவுகளையும் இதில் காணலாம். சுமார் 46,000 அரசுப் பள்ளிகள் மற்றும் அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியங்களை சார்ந்த சுமார் 12,000 தனியார் பள்ளிகள் இந்த தளத்தின் மூலம் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


