Idhayam Matrimony

அமெரிக்க நிதியுதவி குறித்த தகவல்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      இந்தியா
Jaishankar 2023 04 09

Source: provided

புதுடெல்லி : நிதி உதவி தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன என்றும், மத்திய அரசு அது குறித்து விசாரித்து வருகிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் (எஸ்ஆர்சிசி) நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்கான அமெரிக்க நிதியுதவி குறித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரதமரின் பொருளாதார ஆலேசானைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "ட்ரம்ப் நிர்வாகத்தினரால் சில வெளியிடப்பட்டிருக்கும் இந்த தகவல்கள் கவலை அளிக்கக்கூடியவை. இந்தியாவில் சில (தேர்தல்) முடிவுகள் அல்லது கண்ணோட்டத்தை நிறுவும் உள்நோக்கத்துடன் அவை செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

நமது அரசு அவை குறித்து ஆராய்ந்து வருகிறது. உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்க நிதியுதவி குறித்து பார்த்தீர்களா, அதனை நீங்கள் கையாண்டீர்களா, இல்லையா என்பது இங்கே கேள்வி இல்லை. அமெரிக்க நிதியுதவி இங்கு அனுமதிக்கப்பட்டது. அமெரிக்கா நிதி வரலாற்று ரீதியாகவே இங்கே இருந்து வருகிறது. ஆனால் நல்ல நோக்கத்துக்காக, நல்ல நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிதியுதவி இங்கே அனுமதிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் இருந்து தீய நோக்கங்களுடன் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே நிச்சயமாக அதுகுறித்து நாம் ஆராய வேண்டும். அதுபோல ஏதாவது நடந்திருந்தால், தீய நோக்கத்துடன் செயல்பட்ட நபர்கள் யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

முன்னதாக பிப்.20-ம் தேதி மியாமியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு  இந்தியாவில் வாக்களர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அமெரிக்காவால் வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அது வேறு யாரையாவது தேர்ந்தெடுப்பதற்காக வழங்கப்பட்டதா என்றும் அவர் ஆச்சரியமாக கேட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து