Idhayam Matrimony

தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      உலகம்
Pope 2023 06 17

Source: provided

வாடிகன் :  87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். இன்று காலை போப் பிரான்சிஸ் எழுந்து காலை உணவை உட்கொண்டார்’ என கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது, போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரத்தத்தில் ஒரு வகை ரத்த அணுக்கள் குறைவாக இருந்ததால் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் சுய நினைவுடன் தான் இருக்கிறார் என்றும், எனினும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. போப் பிரான்சிஸ் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். போப் பிரான்சிஸ் உடல் நலமற்று இருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து