Idhayam Matrimony

த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2025      தமிழகம்
Vijay 2024-10-23

Source: provided

சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் வியூகம் அமைத்து வருகிறது. கட்சிக்கு இதுவரை 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இதற்கிடையில், த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நுழைவு சீட்டுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 நுழைவுச் சீட்டு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விழாவில் கட்சியின் தலைவர் விஜய் முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறார். கூட்டணி தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும் சுற்றுப்பயணம், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துதல், உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துதல் குறித்தும் விஜய் பேச இருக்கிறார்.

இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவையும் நடத்த மாமல்லபுரத்தில் முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் 25 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு எப்போது நடைபெறும் என்ற விவரத்தையும் இந்த கூட்டத்தில் விஜய் அறிவிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து