Idhayam Matrimony

மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் : அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார் என்றும், இது கோழைத்தனம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது;

"மத்திய அரசு, முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறைத்து தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கின்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடுகிற முதல்வரை கோழை எனக் கூறுபவர்கள் கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும். எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றப்பட்டது உண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதல்வர்  தான் எங்கள் முதல்-அமைச்சர் என அன்புமணி ராமதாசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து