Idhayam Matrimony

டெல்லி முதல்வர் அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      இந்தியா
Adishi 2024-11-18

Source: provided

புதுடில்லி : பெண்களுக்கு ரூ.2,500 என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய அதிஷி, இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் டெல்லி முதல்வரிடம் நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம் வழங்கப்படவில்லை. எனவே நாங்கள் இங்கே சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே இருக்கிறோம். முதல் அமைச்சரவைக்குப் பிறகு பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று பிரதமர் மோடியின் வாக்குறுதி தொடர்பாக நாங்கள் அவரைச் சந்திக்க விரும்புகிறோம். மோடியின் உத்தரவாதம் தவறானது. இவ்வாறு அவர் குறிபிட்டார்.

முதல்வர் தங்களுக்கு எந்த உறுதியும் வழங்கவில்லை என்றும், ஆனால் மார்ச் 8 ஆம் தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி அண்மையில் நடைபெற்ற டில்லி பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இதையடுத்து டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து