Idhayam Matrimony

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுநீரக பிரச்சினையால் போப் பிரான்சிஸ் அவதி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      உலகம்
Pope 2023 06 17

Source: provided

ரோம் நகர் : போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 

போப் பிரான்சிஸ் இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் இருக்கிறார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் “போப் பிரான்சிஸ்க்கு அதிக அழுத்த ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. ரத்தப் பரிசோதனைகளில் அவருக்கு லேசான ஆரம்பகட்ட சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அது கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புடன் அவரை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.

ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. இந்த சிகிச்சைக்குப் பின் கடந்த சனிக்கிழமை அன்று மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அமைதியான இரவை கழித்தார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ ப்ரூனி தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து