எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்கா : வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் அந்நாட்டின் இரண்டு பைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது.
இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் தரையிறங்கிய பின்னர் நடந்த சோதனையில் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. அமெரிக்காவின் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஏ.ஏ.292 விமானம் டெல்லி புறப்பட்டது. போயிங் ரக விமானமான அதில் 199 பயணிகளும் பைலட்டுள், விமான சிப்பந்திகள் 15 பேரும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் ரோம் நகர விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே அது ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.
விமானம் இத்தாலி வான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த விமானத்துடன் இத்தாலி நாட்டின் இரண்டு பைட்டர் ஜெட் விமானங்களும் சென்றன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்துடன் அது தரையிறங்கவிருக்கும் நாட்டின் போர் விமானங்கள் செல்வது உலக நாடுகளின் பாதுகாப்பு நடைமுறைகளில் வழக்கமான ஒன்று எனக் கூறப்படுகிறது. அதன்படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க விமானத்துடன் இத்தாலி பைட்டர் ஜெட் விமானங்கள் இரண்டு பறந்துள்ளன. பின்னர் ரோம் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு விமானம் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் அது புரளி என்பது உறுதியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


