Idhayam Matrimony

டெல்லி மாநில முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் அகற்றம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      இந்தியா
Ambedkar 2023-10-15

Source: provided

டெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் முந்தைய முதல்வர் வைத்திருந்த அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் புகைப்படங்களை தற்போதைய அரசு அகற்றியுள்ளதாக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:-

பாரதிய ஜனதா கட்சி இன்று தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்குக் காட்டியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன், முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்களை அகற்றியுள்ளனர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கைவிட பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதனிடையே, தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்  தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து