Idhayam Matrimony

மும்பையில் 3 நாட்கள் வெப்ப அலை வீசும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2025      இந்தியா
Son 2024-05-28

Source: provided

மும்பை : மும்பையில் அடுத்த 3 நாள்களுககு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பையில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்.

மும்பையில் தற்போது வெப்பநிலை இயல்பை விட ஆறு முதல் ஏழு டிகிரி வரை அதிகமான இருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், இது 5 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது. நகரம் முழுவதும் அதிகப்படியான வெப்பநிலையும், பிற்பகலுக்கு மேல் 36 டிகிரிக்கு மேல் நிலவும் வெய்யிலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மும்பை, தாணே, பல்கர் மற்றும் நவி மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் இயல்பை விட அதிகரிக்கும். மேலும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட்டின் கூற்றுப்படி, மும்பையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். கடல் காற்று தாமதமாகத் தொடங்குவது மும்பையின் வெப்பநிலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, கடல் காற்று நண்பகலில் தொடங்கி, பகல்நேர வெப்பநிலையைச் சீராக்க உதவுகிறது.

இருப்பினும், கடல் காற்று ஒரு மணி நேர தாமதமாவதால், வெப்பநிலை 2-3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். கடந்த சில நாள்களாக, பிற்பகல் நேரங்களில், வடகிழக்கு திசையிலிருந்து வீசும் வெப்பக் காற்று, தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறது. நேற்று மும்பையில் வெப்பநிலை 36 டிகிரி, அதற்கு மேல் பதிவாகும். அதிக ஈரப்பதம் அசௌகரியத்தை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதி நாள்களில் மும்பை மக்கள் அதிகப்படியான வெப்பத்தை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து