Idhayam Matrimony

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
Cong 2024-06-19

கோவை, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமைியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்துக்கு கல்வி, பேரிடர் நிதி தர மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோவை வருகையை கண்டித்து காந்திபார்க் பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கருப்புசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து த.பெ.தி.க., இ.கம்யூ, திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்டவை சார்பில் பீளமேடு பி.எஸ்.ஜி டெக் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பீளமேடு ஹோப்காலேஜ் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து