Idhayam Matrimony

கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டம்?

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்பார் என்ற செய்தி தவரானது என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இது வழக்கமான கூட்டம். அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக பதவி ஏற்கும் திட்டம் ஏதும் இல்லை என ஆம் அத்மி கட்சி விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய நகர்வு, தற்போது கெஜ்ரிவால் பாராளுமன்ற மாநிலங்களை எம்.பி. ஆகிறாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.-வாக இருந்த குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் காலமானார். இதனால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் லூதியானா மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் சஞ்சீவ் அரோராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அவருக்கு பதிலாக கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்லப்போவதில்லை. முன்னதாக கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு செய்திகளும் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவருடைய தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் எந்த ஒரு இடத்திற்கும் மட்டுப்படுத்தப் படவில்லை என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து