எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஓசூர், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன். என்னை இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் இன்று (நேற்று) தருமபுரி செல்கிறேன், காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர்? நான் ஆஜராவேன் என்று உறுதியளித்த பிறகும் என் வீட்டில் சம்மன் ஒட்டியது ஏன்? நான் பயந்து ஓடி ஒளியும் கோழை அல்ல.
காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? வேறு எந்த பிரச்னையிலாவது இவ்வளவு அவசரம் காட்டியிருக்கிறார்களா? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்த தீவிரத்தைக் காட்ட வேண்டும். வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. பெரியார் பற்றி நான் பேசியதால் பெண்ணை வைத்து என்னை அடக்க முயற்சி செய்கிறார்கள்.
நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராக முடியாது, என்ன செய்ய முடியும்? சம்மந்தப்பட்ட அந்த பெண்ணையும் என்னையும் வைத்து விசாரியுங்கள். முதலில் விசாரித்ததையே மீண்டும் மீண்டும் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாளை (இன்று) 11 மணிக்கு வர முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


