எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது என்று திருமாவளவன் பேசினார்.
தருமபுரியில் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளில் எனக்கு தெளிவு இருக்கிறது, தீவிரமான பிடிப்பு இருக்கிறது. ஆகையால், என்னை எந்த கொம்பனாலும் விலைக்கு வாங்க முடியாது. சராசரி அரசியல்வாதியாக இருந்திருதால் கட்சிக்கு எப்போதே அங்கீகாரம் பெற்றிருக்க முடியும்.
10 ஆண்டுகள் தேர்தல் அரசியலுக்கு வராமல் மொத்தம் 35 ஆண்டுகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற பாடுபட வேண்டியிருந்தது. சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பணத்தையும் சுகத்தையும் தேடி, இளம்காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான சொத்துகளை சேர்த்தபிறகு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.
அவர்கள் ஊர் ஊராகச் சென்று அழைந்து கொடியேற்ற வேண்டியதில்லை, மக்களை சந்திக்க தேவையில்லை, உடனடியாக கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு போக நினைக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுநர்கள் ஆராய்ந்து சொல்லி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


