Idhayam Matrimony

காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன்: சீமான் ஆவேசம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2025      தமிழகம்
seemaaan 2025-01-23

கிருஷ்ணகிரி, காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன் என சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

நடிகை விஜயலட்சுமியின் புகார் வழக்கில், இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஓசூரில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:-

இதே வழக்கு தொடர்பாக என்னிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தினார்கள். அதே வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள். என் மீது தீவிரம் காட்டும் போலீசார் அண்ணா பல்கலை, பொள்ளாச்சி பாலியல் வழக்குகளில் இதுபோன்று தீவிரம் காட்டவில்லையே.. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசுதான் அசிங்கப்படுகிறது. 

நான் ஆஜராவேன் என உறுதி அளித்த பின்னர் காவல்துறைக்கு என்ன அவசரம். ஏன் என் வீட்டில் சம்மன் ஒட்ட வேண்டும்? ஆஜராவேன் என கூறிய பின்னரும் என்னை ஏன் விரட்டுகிறீர்கள்? வளசரவாக்கம் போலீஸ் நிலையம் எங்கே சென்றுவிடும்? காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன். என்னை எப்படி சமாளிக்க வேண்டுமென்று தெரியாமல் பெண்ணை வைத்து அடக்க முயற்சி செய்கின்றனர். இன்று காலை 11 மணிக்கெல்லாம் என்னால் ஆஜராக முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும்? தருமபுரி செல்கிறேன். நானே என்றாவது ஒருநாள் ஆஜராவேன். சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து