எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருநெல்வேலி : பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலை கவர்னர் ரவி வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர். என்.ரவி, “சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகவே மகாவிஷ்ணு அய்யா வைகுண்டரின் அவதாரமாக வந்தார். உலகில் பல்வேறு பகுதிகளில் போர் நடக்கும் சூழலில் அய்யா வைகுண்டரின் போதனைகள் மிக முக்கியமானவை. உலகின் மிக முக்கியமான தலைவராக உயர்ந்திருக்கும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தமிழகத்தில் கருத்து வேறுபாட்டுடன் வேறு கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் தேவையான நிதியை தமிழகத்துக்கு வழங்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
66 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் நீராடி உள்ளது சனாதனத்தின் மிகப்பெரிய சாட்சி. காசிக்கும் தமிழகத்துக்குமான உறவு, காசி தமிழ்ச் சங்கம் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். தற்போது மொழிப்போர் தேவையில்லாத ஒன்று . மேலும் ஒருபோதும் அது வெற்றி பெறாது. தமிழக மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் யாரும் மொழியை திணிக்கவில்லை. எதை படிப்பது என்பதை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் குழந்தைகளும் இளைஞர்களும் தமிழகத்தில் இருக்கின்றனர். இங்கு இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையும் அநீதியும் இழைக்கப்படுகிறது. பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை,” என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


