Idhayam Matrimony

மெட்ரோ டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி திட்டம் ரத்து: ரயில் பயணிகள் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      தமிழகம்
metro 2025-01-04

சென்னை, மெட்ரோ டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி திட்டம் ரத்து செய்தது ரெயில்வே நிர்வாகம் இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பயணிகள் மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் பெறலாம். மேலும் மெட்ரோ கார்டுகளில் ரீசார்ஜ் செய்தும் பயணம் மேற்கொள்ளலாம். மெட்ரோ ரெயிலில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சலுகை இன்று முதல் திரும்பப் பெறப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கு மாற்றாக மொபைல் ஆப் மூலம் யூஆர் முறையில் குரூப் டிக்கெட் எடுத்தால் 20 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து