எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண் டெர்லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
27 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள விருக்கின்றது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா, அவர் தனது குழுவினருடன் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
புது டில்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா யூனியனை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாள் பயணமாக டில்லி வந்த உா்சுலாவை மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் விமான நிலையத்தில் வரவேற்றாா்.
இந்தியப் பயணம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உா்சுலா வெளியிட்ட பதிவில், இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதிக்க இருக்கிறேன். மோதல்களும், கடும் போட்டியும் நிலவும் இன்றைய உலகில் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியனின் மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறியுள்ளாா்.
தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை உா்சுலா வான்டொ்லியன் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் தொடா்புகளுக்கு உத்வேகமளிக்கும் உா்சுலாவின் சிந்தனைகள் பாராட்டுக்குரியவை. வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு வலுவான ஒத்துழைப்பு முக்கியமானது. அதை நோக்கிய வலுவான நகா்வுகளை எதிா்நோக்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


