Idhayam Matrimony

மீன்பிடி படகில் திடீர் தீ விபத்து: பத்திரமாக மீட்கப்பட்ட 18 மீனவர்கள்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2025      இந்தியா
Fairman 2023 06 13

Source: provided

ராய்காட் : மகாராஷ்டிரம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்த கில் இருந்த 18 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ் கானுக்குச் சொந்தமான மீன்பிடி படகு ஒன்று நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். பேரிடர் குறித்த தகவல் கிடைத்ததும், இந்தியக் கடலோர காவல்படை, இந்தியக் கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகிலிருந்த அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக அப்பகுதியில் உள்ள மற்றொரு படகில் இறக்கிவிடப்பட்டது. படகிலிருந்து 18 மீன்பிடி மீனவர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதை ராய்காட் எஸ்பி உறுதிப்படுத்தியுள்ளார். 

சம்பவத்தின்போது, அந்த வழியாக சென்ற இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சாவித்ரிபாய் புலே என்ற கப்பல் மும்பையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. தீப்பிடித்த சம்பவத்தை ரோந்து கப்பலில் இருந்தவர்கள் கண்டதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து