எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2024-25 பயிர் ஆண்டு அதாவது ஜூலை முதல் ஜூன் வரை, 115 மில்லியன் டன் கோதுமை உற்பத்தியை எட்ட வேளாண் அமைச்சகம் இலக்கு வைத்துள்ள போதிலும் குறைந்த கொள்முதல் இலக்கு தற்சமயம் வந்துள்ளதாக தெரிவித்தது.
கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் ஆகிய ரபி பயிர்களுக்கான கொள்முதல் இலக்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில உணவு செயலாளர்களுடனான கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டது. கலந்துரையாடல்களுக்குப் பிறகு, வரவிருக்கும் 2025-26 சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை கொள்முதல் இலக்கு 31 மில்லியன் டன்னாகவும், அரிசி 7 மில்லியன் டன்னாகவும், சிறுதானியங்கள் 1.6 மில்லியன் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
வரவிருக்கும் சந்தைப்படுத்தல் பருவத்தில் கோதுமை மற்றும் அரிசி கொள்முதலை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதே வேளையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஏப்ரல் முதல் தொடங்கும் 2025-26 ரபி சந்தைப்படுத்தல் பருவத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளைப் பெறுவதையும் நலத்திட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் உறுதி செய்ய வகையில் கோதுமை கொள்முதல் நடைபெற்றது.
2024-25ல் கோதுமை கொள்முதலில் 30 முதல் 32 மில்லியன் டன் இலக்குக்கு மாறாக சுமார் 26.6 மில்லியன் டன்னை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


