Idhayam Matrimony

முதல்வருக்கு துணை முதல்வர் வாழ்த்து

சனிக்கிழமை, 1 மார்ச் 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-27

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். `இளைஞர் அணிதான் என் தாய்வீடு' என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து