எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தொடர்ந்து 4-வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 25ம் தேதி ஒரு சவரன் ரூ.64,600-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது.
இந்தசூழலில், நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று மேலும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.105 விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


