எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்.சி.எச்.எம்.சி.டி.) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பி.எஸ்.சி. விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்.சி.எச்.எம். ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான என்.சி.எச்.எம். ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 16-ல் தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இது சார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


