எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெஹ்ராடூன்: உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பி.ஆா்.ஓ. முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐ.டி.பி.பி.) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 50 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன எஞ்சிய 3 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மீட்கப்பட்ட உடல் டெஹ்ராடூன் கொண்டு செல்லப்படுகிறது.
ராணுவம், விமானப்படை, என்.டி.ஆர்.எப்., எஸ்.டி.ஆர்.எப். உள்ளிட்ட பல படைகள் இணைந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார்.
காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டறிய தரையில் ஊடுருவக்கூடிய ரேடார், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார். அப்பகுதியில் வானிலை மேம்பட்டு வருவதாகவும், ஆனால் பனிச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


