Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணி உடையும் என்ற ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது: திருமாவளவன்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

Source: provided

சென்னை:தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக்கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது.  அரசே ஒரு மொழியை திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி. சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம். தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும்.

தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம். வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதா இல்லை. இந்தியை படிக்க வேண்டும் என பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கானது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து