எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆக்ரா: ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சனிக்கிழமை இரவு நான்கு பேரை ஏற்றிச் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனமான புல்லட் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். அதே நேரத்தில் புல்லட்டை ஓட்டிவந்த 17 வயதான கரணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. புல்லட்டில் வந்த மற்றொருவரான கிஷன்வீர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
நான்கு பேரும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அது புல்லட் மீது மோதியது என்று இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் ராம் லகான் கூறினார். ககரோல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்வீர் சிங், "விபத்தில் 5 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


