எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : இந்திய அணியின் விராட் கோலி தனது 300-வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடினார்.
300-வது ஒருநாள் போட்டி...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. நேற்றையப் போட்டி விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.
51 சதங்கள்...
இந்திய அணிக்காக விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்கள் விளாசியுள்ள அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
95 போட்டியில் கேப்டன்...
இந்திய அணியை விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாமிடம் பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது.
7-வது இந்திய வீரர்...
இந்திய அணிக்காக 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 7-வது வீரர் என்ற பெருமை விராட் கோலியைச் சேரும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சர்வதேச கிரிக்கெட்டில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 22-வது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும். இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 300-வது போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


