Idhayam Matrimony

அகத்தியா விமர்சனம்

திங்கட்கிழமை, 3 மார்ச் 2025      சினிமா
Agathiya-Review 2025-03-03

Source: provided

கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி,  அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது. ஆனால், அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் ஜீவா, அது என்ன ? என்பதை திகில் கலந்த ஃபேண்டஸியாகவும் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் சொல்வதே ‘அகத்தியா படம்’. ஹீரோவாக தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கும் ஜீவா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.. நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா வந்து போகிறார். சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் பா.விஜய், சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் சித்தர்களின் வலிமையை கருப்பொருளாக வைத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய  வகையில் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ‘அகத்தியா’ அனைவருக்குமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து