எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெருசலேம் : இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக்கொல்லப் பட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்த கேப்ரியல் பெரேரா (வயது 47) என்பவர் ஆவார்.
கேரளாவின் தும்பா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரான பெரேரா, ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் வந்துள்ளார். பின்னர் ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போதுதான், ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெரேராவின் உறவினர் எடிசனும் அவருடன் சேர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்று இருக்கிறார். எனினும், இவர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். சிகிச்சைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் - இஸ்ரேல் எல்லை மிகவும் பதற்றமாக உள்ளது. இத்தகைய சூழலில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


