Idhayam Matrimony

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      உலகம்
White-House 1

Source: provided

அமெரிக்கா : உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காகவும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் உறுதியளித்ததாக டிரம்ப் நிர்ணயிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்தாா். ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு கூறிவருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் முந்தைய பைடன் அரசால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி, அவருடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டாா்.

இந்தச் சூழலில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா். இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாா் என்று அறிவித்தாா். ஆனால், உக்ரனுக்கு இனியும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாா்.

இந்தச் சூழலில், இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த ஸெலென்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினாா். இதனால், டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையேயான ஆலோசனை காரசார வாக்குவாதமாக மாறியது. அதிருப்தியடைந்த டிரம்ப், பேச்சுவாா்த்தையை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தாா். இந்தச் சூழலில், உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து