Idhayam Matrimony

உற்பத்தித்துறை செயல்பாட்டின் கீழ் சலவைத் தொழில்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டில்லி, துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ஐ மீறியதற்காக சலவைத் தொழில்நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக, ஜே.எம்.எப்.சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோவா மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சலவைத் தொழிலானது உற்பத்தி துறை செயல்பாட்டின் கீழ் வராது, எனவே, சலவைத் தொழில் மேற்கொள்ளப்படும் ஆலை என்பதை தொழிற்சாலை என்று குறிப்பிட முடியாது, தொழிற்சாலை சட்டத்தின் கீழ் சலவைத் தொழில் வராது என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  சலவைத் தொழிலானது உற்பத்தித் துறை செயல்பாடு தான் என்று மாநில அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், கோவா மாநில அரசின் வாதத்தை எதிர்த்த சலவைத் தொழில் நிறுவனர்,  இந்த தொழிலை தொழிற்சாலைகள் சட்டத்தில் அல்லாமல், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய சேவைத் தொழில் என்று வாதிட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்  தொழிற்சாலைகள் சட்டம், 1948 இன் கீழ், துணிகளை துவைத்தல், காயவைத்தல் மற்றும் உலர்த்துதல் போன்ற தொழில்கள், உற்பத்தித் துறை செயல்பாடு என்ற வரையறைக்குள் வர வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அவை புதிய தயாரிப்புகளை உருவாக்காவிட்டாலும் கூட உற்பத்தித் துறை செயல்பாட்டின் கீழ் வரும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி மேற்கொள்ளப்படும் சலவைத் தொழிலானது, தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வருவதால் அது தொழிற்சாலைகள் சட்டம், 1948, பிரிவு 2(எம்)-இன் கீழ் வரும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து