Idhayam Matrimony

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக கூறவில்லை: இ.பி.எஸ்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      தமிழகம்      அரசியல்
Eps 024-12-03

சென்னை, தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இ.பி.எஸ்., “கூட்டணி பற்றிய பேச்செல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் எதாவது கூறினோமோ! யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?” என்றார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. - அ.தி.மு.க.  கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “அ.தி.மு.க. , திமுகவை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது.

தி.மு.க. வை வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள். கூட்டணி குறித்து 6 மாதங்கள் கழித்து தெரிவிக்கப்படும். ” என்றார்.

அ.தி.மு.க.  கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் பதில் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து