எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உக்ரைன் : உக்ரைன் - ரஷ்யா மோதல் விவகாரத்தை பைடன் அரசு சரிவரக் கையாளவில்லை என்றும் தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கு துக்கமே மிஞ்சியது என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதிருந்தே தான் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டிருக்காது என்று ட்ரம்ப் கூறிவந்தார். மேலும், ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று சூளுரைத்தார். அதன்படி, அதிபரான நாள் முதல் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முயன்று வருகிறார். ஆனால், அண்மையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு சுமுகமாக முடியவில்லை. ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றபட்டார். அதன்பின்னர் அடுத்த அதிரடி நகர்வாக உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அனைத்து ராணுவ உதவியையும் ட்ரம்ப் விலக்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் விவகாரத்தை முந்தைய பைடன் அரசு மோசமாகக் கையாண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் காலத்தில்தான் ரஷ்யா ஜார்ஜியாவைக் கைப்பற்றியது. அதன்பின்னர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் கீழ் ரஷ்யா தனது ராணுவ, கடற்படை பலத்தை விஸ்தரித்துக் கொண்டது. நீர்மூழ்கித் தளம், ராணுவத் தளம் என அதிகார எல்லையை விஸ்தரித்தது. ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ரஷ்யா உக்ரைனை முழுவதுமாகவே ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சித்துள்ளது. இடையில் நான் அதிபராக இருந்தபோது மட்டுமே ரஷ்யா துக்கத்தைத் தவிர வேறதையும் அமெரிக்காவிடமிருந்து பெற முடியவில்லை.
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன், ரஷ்யா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறாக சம்பந்தப்பட்ட எல்லோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது முடிவும் விரைவில் எட்டப்பட்டும். ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறது. உக்ரைன் மக்களும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் தான் மிகமிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படக் கூடாது என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் இங்கே இந்த பேச்சுவார்த்தையில் பங்குவகிக்கும் இடத்தில் இருக்க மாட்டார்கள். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


