எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இன்றையை கூட்டத்தில் அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் தலைமையில்...
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கூட்டியுள்ளார்.
கட்சிகளுக்கு அழைப்பு...
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 100க்கு மேற்பட்டவர்கள் கட்சி பிரதிநிதிகளை சார்ந்தவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பங்கேற்கவுள்ள நிலையில், த.வெ.க. பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள் குறித்து...
இந்நிலையில், இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கைகள் எங்கே போடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்பான ஆய்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆய்வு நடைபெற்றது. இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஏற்பாடுகளை முதல்வர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


