எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர் : நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முக்கிய வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
டி20 தொடர்...
நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் சல்மான் அலி அகாவும், துணைக் கேப்டனாக சதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீக்கம்...
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலேயே ஒரு வெற்றிகூட பெறாமல் வெளியேறியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இதனால் டி20 கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்கிறார். இருப்பினும், பாபர் அசாம் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் சௌத் சாகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தவிர்த்து சாகீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ராஃப் இருவரும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்...
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அணி மார்ச் 16 ஆம் தேதி தொடங்கும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி அகா, அப்துல்லா சாபீக், அப்ரார் அகமது, அகீஃப் ஜவேத், பாபர் அசாம், பஹீம் அஸ்ராப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சுஃப்யான் முகீம், தயாப் தாஹீர்.
டி20 அணி: சல்மான் அலி அகா(கேப்டன்), சதாப் கான், அப்துல் சமத், அப்ரார், ஹாரீஸ் ராப், ஹசன் நவாஸ், ஜஹாந்தத் கான், குஷ்தில் ஷா, முகமது அபாஸ், முகமது அலி, முகமது ஹரிஸ், முகமது இர்பான் கான், ஒமைர் பின் யூசுப், ஷாகீன் ஷா, சுப்யான் முகீம், உஸ்மான் கான்.8
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


