எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர் : இந்திய அணியைப் போன்று தென்னாப்பிரிக்க அணியிலும் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. அவர்கள் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தில்...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று லாகூரில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ரிக்கி பாண்டிங்....
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், நியூசிலாந்தைக் காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி வலுவாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
நீண்ட பேட்டிங் வரிசை...
இது தொடர்பாக ஐ.சி.சி. ரிவ்யூவில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது: தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளில் தென்னாப்பிரிக்க அணியே வலுவாக இருப்பதாக நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க அணியில் நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. அதனால், அவர்கள் நியூசிலாந்தைக் காட்டிலும் சற்று வலுவாக உள்ளார்கள்.
கேன் வில்லியம்சன்...
நியூசிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் அரையிறுதிப் போட்டியில் ரன்கள் குவிக்க வேண்டும். முக்கியமான போட்டிகளில் ஒவ்வொரு அணியில் உள்ள முக்கியமான வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். வில்லியம்சன் மிகச் சிறந்த ஆட்டக்காரர். அரையிறுதிப் போட்டியில் அவரது வேலை என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கும். நியூசிலாந்து அணிக்காக தனி ஒருவராக கேன் வில்லியம்சன் போட்டியை வென்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்திய அணி போன்று...
தென்னாப்பிரிக்க அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. அந்த அணியில் ரியான் ரிக்கல்டான், டெம்பா பவுமா, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன் போன்றோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணியைப் போன்று தென்னாப்பிரிக்க அணியிலும் பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. அவர்கள் நியூசிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


