எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இன்று லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.
அணியில் மாற்றமா?...
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இன்று விளையாடவுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் ஆல்ரவுண்டரான ஜியார்ஜ் லிண்டே கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்க்ரம் சந்தேகம்...
இங்கிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் பீல்டிங்கின்போது, அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் போட்டியில் அவர் அதன் பின் பீல்டிங்குக்கு வரவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டியை துபாயில் விளையாடும் சூழல் ஏற்பட்டால், அந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதன் காரணமாகவே, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜியார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


