Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்கு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      விளையாட்டு
India 2024 08 05

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முதலாவது அரையிறுதி...

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. நேற்று (மார்ச் 04) நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கூப்பர் கோன்னலே ரன் எடுக்காமல் அவுட்டானார். பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.

ஆஸி. 264/10.... 

டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்து இருந்த போது வருண் பந்தில் அவுட்டானார். பிறகு ஸ்மித்தும், லபுஸ்சங்கேவும் ரன்களை சேர்க்க துவங்கினர். ஆனால், லபுஸ்சங்கே 29, இங்கிலீஸ் 11 ரன்களில் அவுட்டானார்கள். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மித்தும் 73 ரன்களுக்கு அவுட்டானார். மேக்ஸ்வெல் 7 , பென் துவார்சுஹூயுஸ் 19, ரன்களில் அவுட்டானார். அலெக்ஸ் கரே 61 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் ஆஸி., அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

265 ரன்கள் இலக்கு...

இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.  இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து