Idhayam Matrimony

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      தமிழகம்
CM 2025-03-06

Source: provided

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பதிவுத்துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 22 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து