எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு: விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வைக்கு ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரி ஆக்க முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுள்ளது.
உயர் கல்வியை பொருத்தவரை தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடியாக திகழ முதல்வர் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் செயல்படுகிறார். சமீபத்தில் பல்கலைக்கழக மானிய குழு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது மாநிலங்களுக்கு எதிராக உள்ளது.
மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் அந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். விரைவில் அதில் வெற்றி பெறுவோம். வரும் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தமான தேர்வு நடைபெற உள்ளது.
சுமார் 4000 பேராசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நியமிக்க உள்ளோம். அதை தவிர 1000 கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர படுத்த திட்டமிட்டுள்ளோம். ஈரோட்டில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மையத்தை மூடும் திட்டமில்லை. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்திலும் காவல்துறையாலும் விசாரிக்கப்படுகின்றன. எனவே, அது குறித்து கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


