Idhayam Matrimony

நாளை முதல் டெல்லியில் பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பா.ஜ.க. அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2025      இந்தியா
BJP 2024-03-05

Source: provided

புதுடில்லி: டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி நாளை (மார்ச் 8) முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பா.ஜ.க.  தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பா.ஜ.க.  தேசிய பொதுச்செயலாளர் கூறியதாவது,

பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை குடும்ப வருமானம் கொண்ட 15 - 20 லட்சம் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தப்படும் மோசடிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்குவதாக அரவிந்த் கேஜரிவால் மூன்று வருடங்களாக அளித்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்று அவர் கூற வேண்டும். டில்லி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடியின் உறுதிமொழியாகும். இது நிறைவேற்றப்படும் என்று ஆத் ஆத்மி தலைவர்களுக்கும் கூடத் தெரியும் என்று அவர் கூறினார்.  

பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையில் போலி பெயர்களைத் தவிர்ப்பதற்காக பல நிலை சரிபார்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி, மகளிர் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஒரு ஐடி தளம் தயாராக உள்ளதாகவும் டில்லி அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து