எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
நீட் என அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு "நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி" எனும் அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மருத்துவத்துறையில் பட்டப்படிப்பில் சேர்வதற்கு மிகமுக்கியமான தேர்வாக கருதப்படுகிறது.
குறிப்பாக, எம்.பி.பி.எஸ்.,, பி.டி.எஸ்., ,பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., ,பி.யு.எம்.எஸ்., பி.ஹெச்.எம்.எஸ்., போன்ற பட்டப்படிப்புகளில் சேர இந்த தேர்வு எழுதவேண்டியது அவசியமாகும்.மேலும், 2025-ம் ஆண்டு ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர விரும்பும் ராணுவ நர்சிங் சேவை ஆர்வலர்களும் நீட் க்கு தகுதி பெற வேண்டும். நான்கு ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான தேர்வுக்கான குறுகிய பட்டியலுக்கு நீட் மதிப்பெண் பயன்படுத்தப்படும்.
இந்த சூழலில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


