எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வேலூர் : அரக்கோணத்தில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.எப். ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்
வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம். சொல்லுதல் யாவருக்கும் எளியவாம் - என அமித்ஷா பேச்சுக்கு திருக்குறளை மேற்கோள் காட்டிச்சென்றார் அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரக்கோணத்தில் நடைபெற்ற சி.ஐ.எஸ்.எப். ஆண்டு துவக்க விழாவில் பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.
அதாவது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமித் ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கூறிச் சென்றார் துரைமுருகன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


