எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இன்று (மார்ச் 8-ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் மகளிர் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர். இது குஜராத்தில் மகளிர் தினத்தை ஒட்டிய சிறப்பு ஏற்பாடாகக் கருதப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரியில் அம்மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் (பணக்காரச் சகோதரி)’ எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணியில் முழுக்க, முழுக்கப் பெண் போலீஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது குறித்து பாஜக ஆளும் குஜராத்தின் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறும்போது, “ இது மாதிரியான ஏற்பாடு இந்திய வரலாற்றில் முதல் முயற்சி ஆகும். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜராத் காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரையிலும் பெண்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருப்பர்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுமார் 2,100 கான்ஸ்டபிள்கள், 187 சப்-இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளில், 16 துணை போலீஸ் காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியும் இடம்பெற உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


