எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒட்டாவா : கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என தனது இறுதி உரையில் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது கனடா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார். கனடாவின் புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளது.
தற்போது கனடாவின் இடைக்கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன். மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன். எனது தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி நாட்களில் கூட, நான் கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதை கூற விரும்புகிறேன். இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


