Idhayam Matrimony

இந்தியாவுடனான நல்லுறவில் முன்னேற்றம்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

பெய்ஜிங் : லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய, சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் எல்லையில் இருந்து படைகள் மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி யங் ஜி நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா - சீனா இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீன வெளியுறவுத்துறை மந்திரி, கடந்த ஆண்டு ரஷியாவின் கசான் நகரில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்குப்பின் இந்தியா, சீனா இடையேயான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பல்வேறு கட்டங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பான முடிவுகளை பெற்றுள்ளன' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து