எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசியதால் 19-வது ஓவரின் போது மூன்று பேர் மட்டும் வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என்று நடுவர் அஜிதேஷ் அர்கால் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அமெலீயா கெர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹர்மன்பிரீத் கௌர் லெவல் -1 குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அவர் சட்டப்பிரிவு 2.8-ஐயும் மீறியுள்ளார். இதனால், லெவல்-1 விதிமீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
__________________________________________________________________________________________
கால்பந்து அணியில் சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (151 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 40 வயதான அவர், கடந்த 2005-ல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடத் தொடங்கினார். இந்தச் சூழலில் சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். தற்போது அதற்கு விடை கொடுத்துள்ளார். இந்த மாதம் இறுதியில் மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் தேசத்துக்காக மீண்டும் விளையாட உள்ளார். சர்வதேச அளவில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் அவர் உள்ளார். முதல் இடத்தில் ரொனால்டோ உள்ளார்.
ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெங்களூரு எப்.சி அணிக்காக சுனில் சேத்ரி விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 12 கோல்களை பதிவு செய்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக கோல்களை பதிவு செய்தவராக உள்ளார். “எனது ஓய்வு முடிவு உடல் சார்ந்தது அல்ல. நான் இன்னும் ஃபிட்டாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன், பந்தை சேஸ் செய்கிறேன், டிபென்ட் செய்கிறேன். கடினமாக உழைப்பது எனக்கு சிக்கல் அல்ல. ஓய்வுக்கான காரணம் மன ரீதியானது” என சுனில் சேத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
__________________________________________________________________________________________
மீண்டும் கேப்டனாக ஸ்டோக்ஸ்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகாமல் மிக மோசமாக விளையாடி வெளியேறியது. இதனால் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தனது கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார். இங்கிலாந்தின் வெள்ளைப் பந்து (டி20, ஒருநாள்) கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. 2022இல் ஓய்வை அறிவித்த அவர் உலகக் கோப்பைக்காக வந்து விளையாடினார். தற்போது மீண்டும் அவரை அணி தேடுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீ ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்பு வருகிறதென பார்க்க வேண்டும். நான் பார்த்ததிலேயே பென் ஸ்டோக்ஸ்தான் சிறந்த கேப்டன். அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக இருக்கும். அவர் மிகவும் புத்திசாலிதனமான கேப்டன். டெஸ்ட்டில் அவரை பார்த்துள்ளோம். அவர் ஆண்களின் தலைவன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை எடுக்கும் ஒரு நபர். அழுத்தமான சூழ்நிலைகளில் ‘இதுதான் சரியான பாதை. செல்லுங்கள்’ என அணியை வழிநடத்துபவர் ஸ்டோக்ஸ் தான் என்றார்.
__________________________________________________________________________________________
ரோகித்துக்கு சூர்யகுமார் ஆதரவு
முன்னாள் சாம்பியன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி வருகிற மார்ச் 9 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா, ரோகித் சர்மாவின் தலைமைப் பண்பு மற்றும் உடற்தகுதி குறித்து கிண்டல் செய்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அவரின் சாதனைகளைச் சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “ஒரு கேப்டனாக 4 ஆண்டுகளில் 4 ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை ரோகித் அழைத்துச் சென்றுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா கடந்த 15-20 ஆண்டுகளாக இந்திய அணிக்கு அதிக பங்களிப்பை அளித்திருக்கிறார். பல சாதனைகளைப் படைத்த அவர் கடந்தாண்டு உலகக்கோப்பையை வெல்லுவதற்கு முக்கியப் பங்காற்றினார். ஐ.பி.எல். மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடும் போது அவர் அருகில் இருந்து எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறேன். இறுதிப்போட்டியில் வெற்றிபெற அவருக்கு வாழ்த்துகள். நமது அணியினரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்” என்றார்.
__________________________________________________________________________________________
சேவாக்கின் சகோதரர் கைது
செக் மோசடி வழக்கில் சேவாக் சகோதர் வினோத் சேவாக் கைதாகி இருக்கிறார். ஜல்தா புட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை வினோத் சேவாக், விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் நடத்தி, இயக்குநர்களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும் , ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மோகன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனத்திற்காக பொருட்கள் வாங்கி இருக்கின்றனர். அதற்காக ரூ.7 கோடி செக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செக்கை வங்கியில் கிருஷ்ணா மோசன் டெபாசிட் செய்த போது, அந்த செக் பவுன்ஸாகி இருக்கிறது.
இதற்கான காரணம் குறித்து அறிக்கையில், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் கிருஷ்ணா மோகன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த விசாரணைக்கு அவர்கள் மூவரும் ஆஜாராகாத நிலையில், 2023ஆம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
__________________________________________________________________________________________
பிரேசில் அணியில் நெய்மர்
பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர். சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார். காயம் காரணமாக பல போட்டிகளை விளையாடமல் இருந்த நெய்மர் தற்போது சன்டோஷ் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் தேசிய அணியில் நெய்மர் இணைந்துள்ளார். பிரேசில் அணிக்கு அதிக கோல்கள் அடித்தவர் நெய்மர் என்பது குறிப்பிடத்தக்கது. பீலேவுக்கு பிறகு பிரேசில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார் நெய்மர். உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியா, ஆர்ஜென்டீனா அணியுடன் பிரேசில் மோதவிருக்கிறது. 33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார். இந்த அறிவிப்பினால் நெய்மர் இல்லாமல் தவிக்கும் பிரேசில் அணியும் அந்நாட்டு ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


